×

மத நல்லிணக்க நாள் உறுதிமொழி ஏற்பு

தர்மபுரி, ஆக.19: தர்மபுரி கலெக்டர் அலுவலக வளாகத்தில் மத நல்லிணக்க நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி, கலெக்டர் சாந்தி தலைமையில் நடந்தது. நிகழ்ச்சியில் கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் (நிலம்) நஷீர் இக்பால், (வளர்ச்சி) மரியம் ரெஜினா, (சத்துணவு) மணிமேகலை, பிஆர்ஓ லோகநாதன், கலெக்டர் அலுவலக மேலாளர் (பொது) ராஜசேகர் உள்பட அரசுத்துறை அலுவலர்கள், பணியாளர்கள் கலந்துகொண்டனர். ஆண்டுதோறும் ஆகஸ்ட் 20ம் தேதி நல்லிணக்க தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. நாளை சனிக்கிழமை அரசு விடுமுறை என்பதால், நேற்றே மத நல்லிணக்க நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

\”நான் சாதி, இன, வட்டார, மத அல்லது மொழி பாகுபாடு எதுவுமின்றி, இந்தியாவின் அனைத்து மக்களின் உணர்வுபூர்வ ஒற்றுமைக்கும் நல்லிணக்கத்திற்கும் பாடுபடுவேன் என்று உளமார உறுதிமொழி எடுத்துக்கொள்கிறேன். மேலும் எங்களுக்கு இடையேயான அனைத்து வேறுபாடுகளையும், வன்முறையில் ஈடுபடாமல், பேச்சுவார்த்தைகள் மூலமாகவும், அரசியலமைப்பு சட்ட வழிமுறைகளை பின்பற்றியும் தீர்த்துக்கொள்வேன் என்றும் இதனால் உறுதி அளிக்கிறேன்.\” என்ற உறுதிமொழியினை கலெக்டர் வாசிக்க, அரசுத்துறை அலுவலர்கள், மற்றும் பணியாளர்கள் வாசித்து உறுதிமொழியினை ஏற்றுக்கொண்டனர்.

கடத்தூர்: கடத்தூர் ஒன்றிய அலுவலகத்தில், பிடிஓ வடிவேலன் தலைமையில் மத நல்லிணக்க நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது. இதில் சாதி, மத, இன, மொழி பாகுபாடின்றி இந்தியாவின் ஒற்றுமைக்கு, மத வேற்றுமை தவிர்த்து ஒற்றுமையாக பாடுபடுவேன் எனவும், வன்முறையில் ஈடுபடாமல், இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் கீழ் பேச்சுவார்த்தை ஏற்பட்டு சமாதானம் செய்து கொள்வேன் என உளமாற உறுதி ஏற்கிறேன் என உறுதிமொழியை வாசித்து, பிடிஓ அலுவலக பணியாளர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

The post மத நல்லிணக்க நாள் உறுதிமொழி ஏற்பு appeared first on Dinakaran.

Tags : Day ,Dharmapuri ,Dharmapuri Collector ,Collector ,Shanti ,Dinakaran ,
× RELATED நவீன கருவி பொருத்திய 200 ஹெல்மேட் விநியோகம்